செய்திகள்

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைச்சுடுச்சா? போட்டோவை பாருங்க புரியும்!

லாஸ்லியாவுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்லும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சேரனை, சேரப்பா என்று அழைத்ததன் மூலம் கவினை காதலித்ததன் மூலம் பிரபலமானார்.

அண்மையில் பேக் டூ சென்னை தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியிருந்தார் லாஸ்லியா. அதனை தொடர்ந்து அவரை தமிழகத்தின் மருமகளே வருக வருக என வரவேற்றனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் சென்னை வந்து சென்றது குறித்து லாஸ்லியா எந்த தகவலும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் அவர் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார் என்றும், ராஜா ராணி சீரியலின் பார்ட் 2வில் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்து வருகின்றனர்.

லாஸ்லியாவின் கேரியர் குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளிவராத நிலையில், இன்று ஒரு போட்டோ வைரலாகி இருக்கிறது. அதாவது லாஸ்லியா தனது டிவிட்டர் பக்கத்தில் ஜிம்மில் இருப்பதாக குறிப்பிட்டு ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.

ஸ்லிம்மாக ஜிம் இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் அடுத்த புராஜெக்டிற்காகதான் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஜிம்மிற்கு செல்கிறார் என டிவிட்டி வருகின்றனர். ஆனால் அது வெள்ளித்திரைக்காகவா அல்லது சின்னத்திரைக்காகவா என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP HITS

To Top